சென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் உடலுக்கு பூஜாரி ஒருவர் காட்டிய கற்பூர ஆரத்தி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையில் 1971ல் கிளினிக் ஆரம்பித்து, தன்னிடம் வரும் நோயாளியிடம் 2 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சையளித்தவர் டாக்டர். ஜெயச்சந்திரன். இவர் தனது 71வது வயதில், நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

கடைசியாக அவர் நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம், ரூ.5 மட்டுமே. எனவே, அப்பகுதி மக்கள் அவரை ஒரு கடவுளை போல மதிக்கிறார்கள். 5 ரூபாய் டாக்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார் ஜெயச்சந்திரன். ஏழை மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேலான இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல் என பல சேவைகளில் ஈடுபட்டவர் ஜெயச்சந்திரன். இந்த நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டபோது, கொடுக்கப்பட்ட மரியாதை மக்கள் அவர் மீது வைத்த அபரிமிதமான அன்பை காட்டுவதை போல இருந்தது. பொதுவாக இறந்தவர்கள், பூதவுடலை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும்பொழுது கோவில் அருகே செல்ல வேண்டி வந்தால், மேளம் அடிப்படை நிறுத்தி விட்டு அமைதியாக கடந்து செல்வார்கள். ஆனால், ராயபுரத்தில் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயசந்திரன் இறுதி ஊர்வலத்தின்போது வேறு மாதிரி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

ராயபுரம், எல்லை காக்கும் ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயம், அருகே ஜெயச்சந்திரன் பூத உடல் கொண்டு செல்லப்பட்டபோது, கோவில் பூசாரி கற்பூரம் ஏற்றி ஜெயச்சந்திரன் பூதவுடலுக்கு அதை காண்பித்தார். மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன், மக்கள் மனதில் கடவுளுக்கு நிகரான இடம் பிடித்துள்ளார் என்று அந்த பூஜாரியின் செயல்பாடு எடுத்துக்காட்டியுள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/high-respect-given-doctor-jayachandran-337005.html

Opportunity kidachkooda naan ippidi irupenanannu teriyadu. RIP and I solute this noble person.
ReplyDeleteAfter so many years,I am happy to view your blog.Please post your Gyan regularly.
ReplyDelete