Friday, January 11, 2019

மல்லாக்க படுத்த பெருமாளும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டும்!

அம்மாபாளையதிலிருந்து நகர மறுக்கும் மல்லாக்க படுத்த பெருமாளை அங்கேயே பிரதிஷ்டை செய்து "அம்மாபாளையத்தை ஆட்கொண்ட மல்லாக்க படுத்த பெருமாள்" என்று நாம கரணம் செய்து, இவர் மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரின் மறு  அவதாரம் என்று புராணத்தில் [புளுகி] எழுதலாமே!

ஏனென்றால், இப்பவே பெருமாள் படுத்த இடத்திலேயே காணிக்கை, பூஜை, அபிஷேகம் இத்யாதி இத்யாதி என்று நல்ல கல்லா கட்டும் போது...இங்கேயே எழுத்தருளவேண்டும் என்ற பிராப்தம் இருக்கும்ப் என்னவோ! 

ஸ்ரீஹரிகோட்டாவில்  ராக்கெட் விடும் நம் விஞ்ஞானிகள் இந்த பெருமாளை  நகர வைக்க  ஏதாவது ஹெல்ப் பண்ணப்படாதோ!
---------------------------------------

வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
டயர்கள் பஞ்சர்

அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது. வந்தவாசி, திருவண்ணாமலை, தாண்டி செங்கம் வருவதற்குள் ஒரு மாதமாகி விட்டது.

பக்தர்கள்
பக்தர்கள் நேற்றிரவு செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்துக்கு சிலை வந்தது. ஆனால் சிலை வருவதற்கு முன்னமேயே ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு வந்து விட்டார்கள். சாமி தரிசனம், உண்டியல் காணிக்கை என எல்லாம் முடிந்து அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்பட தயாரானது.

15 டயர்கள்


மண் சாலைகள்

 மேலும் அம்மாபாளையம் - செங்கம் இடையே 18 கி.மீட்டருக்கு மண் சாலைகள் உள்ளது என்பதால் அதை தாண்டி பெருமாளை கொண்டு செல்வதில் திரும்பவும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. 

மண் சாலைகள்





No comments:

Post a Comment